Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
நேர்காணல்
ஒரு கனவை நிஜமாக்கி வாழ்ந்து காட்டுதல்
கவுரவ் ஜானி

வர்த்தக ரீதியிலான நெருக்கடிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு ஆவணப் படத்தைத் தயாரிப்பது எளிது, தம்மிடம் அதற்கான வசதியும் தொலை நோக்கும் இருந்தால். ஆனால் சிக்கலான தருணங்கள் வருவது பிற்பாடுதான் - அதாவது அந்தப் படத்தை விற்க முயலும் போது. ரைடிங் ஸோலோ டு தி டாப் ஆஃப் தி வோல்டு (Riding Solo to the Top of the World). அதாவது 'உலகின் உச்சிவரை தனியாக மோட்டார் பைக் பயணம்' என்ற படத்தை ஒரு தனி மனித யூனிட்டாகவே மாறி படைத்த கவுரவ் ஜானி (Gaurav Jani) நிறையவே பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்தவர். அவரது பயணம் மிகவும் கடுமையானதாகவே இருந்தது. ஆயினும் தற்போது விருதுகள் வந்து குவிந்தபடி இருக்கின்றன. மிகச் சமீபமாகக் கிடைத்ததோ 'வாதாவரன் 2007' என்ற சுற்றுச்சூழல் திரைப்பட விழாவின் சிறப்பு ஜூரி விருது. அவருடன் நடத்திய நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:

இந்தியாவில் தனி ஒருவனாக ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருப்பது எந்த அளவுக்குக் கடினம்?

மற்ற எந்தத் துறையையும் போலவே இதிலும் தனியாகத் தொடங்குவது என்பது எப்போதும் கடினம் தான். ஆனால் திரைப்படங்களை முக்கியமாக ஆவணப்படங்களைப் பொறுத்தவரை இது ஒரு போராட்டம் தான். இதற்கென நல்ல ஒரு சந்தை இல்லாததால் இதில் பண முதலீடு செய்பவர்கள் மிக அபூர்வமே. நீங்கள் சொந்தமாக தனியாக ஒரு ஆவணப் படத்தை தயாரிக்க முயன்றால் அதை விற்பனை செய்யப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

'ரைடிங் ஸோலோ ...' வைத் தயாரிக்க உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?

நான் படம் பண்ணத் தொடங்கியபோது இந்தளவு கஷ்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு படம் செய்த பிறகுதான் கன்னி முயற்சியாகப் படம் செய்யும் ஒரு இயக்குநருக்கு இப்படத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவது எப்படிப்பட்ட பிரம்மபிரயத்தனம் என்று புரிகிறது. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் இன்று எத்தனையோ விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதால் ஆவணப்படங்கள் சிலசமயம் பொது மக்களின் கண்ணில் படுவதற்கே நீண்டகாலம் தேவைப்படுகிறது. சோர்ந்து போகவிடாமல் என்னை ஊக்குவித்த விஷயம் என்னவென்றால் ஒரு தனிமனித இயக்குநராக என் சொந்த இஷ்டப்படி படம் எடுக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் ஒன்றுதான். பிற்பாடு என்னாகும் என்ற சிந்தனையின்றி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது.

பாலிவுட் (பம்பாய் படவுலகம்) சினிமாக்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? அத்தகைய படங்களுக்கென்று ஓர் இடம் இருக்கிறதா? மற்ற படங்கள் வளர அவை இடம் கொடுப்பதுண்டா?

'பாலிவுட்'டிலிருந்தும் சில நல்ல படங்கள் வெளிவருவதுண்டு. ஆனால் எல்லாவிதமான படங்களுக்கும் அதற்கென இடம் தேவைப்படுகிறது - மசாலாவாகவோ உயர் ரகமானதோ சிறிய ஆவணப் படங்களாகவோ எதுவாயிருந்தாலும். இப்போது வெளிவரும் சில ஆவணப்படங்கள் பெரும்பான்மையான பாலிவுட் படங்களைவிடச் சிறந்தவை. ஆனால் மக்களுக்கு இப்படங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. ஏனென்றால் இவைகளுக்கென்று ஒரு விநியோகிஸ்த வலை இல்லை. இப்படங்களில் சில வர்த்தக ரீதியான பல படங்களைவிடக் களிப்பூட்டுவதாகவும் சிந்தனையைக் கிளருவதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.

24 மணிநேர தொலைக்காட்சி சேனல்கள் அதிகரித்துவிட்டதனால் அதற்கேற்ப பிராந்திய தயாரிப்பகளுக்கு நல்ல தேவை இருக்க வேண்டுமல்லவா? உண்மையான நிலவரம் என்ன?

உள்ளடக்கத்துக்கு என்று பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் இந்தத் தேவை ஒரு குறிப்பிட்ட ரீதியிலான உள்ளடக்கத்துக்கே. பெரும்பாலும் கவர்ச்சியிலும் குறியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உள்ளடக்கம் பயமுறுத்துமே தவிர ஊக்கம் அளிப்பதில்லை. தொலைக்காட்சியில் இப்போது தரமான உள்ளடக்கத்தைப் பற்றி யாருக்குமே அக்கறையில்லை. புனைகதையல்லாத இரண்டு சேனல்களிலும் முக்கால்வாசி நிகழ்ச்சிகளிலும் மிக உயரமான கட்டிடங்கள், மிக நீளமான பாலங்கள், மிக வேகமான ஊர்திகள், மிக வலிமையான இது, கொடுமையான அது என்கிற விஷயங்கள்தான் தெரிகிறது. அனைத்து விஷயங்களும் பயமுறுத்துவதாக அல்லது பெரும்புள்ளிகளைத் தழுவியதாக அமைகின்றன.

ஆவணப் படத்தயாரிப்பாளர்களுக்கிடையில் வேடிக்கையாகச் சொல்வதுண்டு - இந்தக் காலத்தில் ஆவணப்படம் தயாரித்துப் பணமும் பண்ணவேண்டுமென்றால் ஒருவனுக்குப் பாம்பையோ முதலையையோ பிடிக்கவும் தெரிந்திருக்கவேண்டுமென்று. அப்படிப்பட்டவர்களுக்கு ஏராளமான வாய்ப்புக்களும் அவர்கள் உலகிலேயே மிக நீளமான பாம்பையோ மிக கனமான முதலையையோ பிடித்துக்கொண்டு அதிகப்படியான தொலைக்காட்சி நேரமும் கிடைக்கிறது.

தங்கள் பார்வையில் பயணம் என்பதற்கு என்ன அத்தம்? அதிலும் முக்கியமாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது குறித்து?

நானே அதைப்புரிந்து கொள்ள இன்னமும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். பயணிப்பது என்பது எனக்கு இயற்கையாகவே அமைந்த ஒன்று. மோட்டார் பைக் என்பது ஓட்டுபவரின் ஆளுமையின் இன்னொரு பரிமாணம் என்றே சொல்லலாம். காரைவிட பைக் என்பது மிக றிமீக்ஷீsஷீஸீணீறீ ஆன, ஒருவரின் ஆளுமையைச் சார்ந்த வாகனம் என்றுகூடச் சொல்லலாம் - நமக்கு மிகவும் பிடித்த உணவு வகையைப் போல, மணத்தைப் போல, இடத்தைப் போல அது மிக இயல்பாகவும் ஆழ்மனதளவிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் என் கனவுகளை வாழ்க்கையாக மாற்றியபடி என் தனிமனித சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு பல விஷயங்களைச் செய்கிறேன் என்பதே.

இன்று பல வகைகளில் நாம் நம்மை தமிழர்கள் என்றும் மலையாளிகள் என்றும் குஜராத்திகள் என்றும் பம்பாய்க்காரர்களென்றும் தான் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட ஆளுமைதான் நமக்குப் பரிச்சயமானது. உங்கள் அபிப்பிராயத்தில் பயணம், அதிலும் தொலைதூர மோட்டார் சைக்கிள் பயணம் இந்தியாவை ஒருங்கிணைக்கவும் நாம் நம்மை இந்தியர்களென்று உணரவும் உதவும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம். இப்போது பாரதத்தின் சில பகுதிகளைச் சென்றடைந்த போது எனக்கென்னவோ நாம் ஒருவருக்கொருவர் அன்னியர்களாக இருக்கின்றோம் என்று படுகிறது. பயணம் செய்யும் போது இந்தியா நம் முன் திறந்து வைக்கப்பட்டது போல உணர்கிறோம். நமக்குள் இருக்கும் இந்தியனை வெளிக்கெணரவும் செய்கிறது. ஆனால் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது, பல கிராமங்களிலும் மக்கள் என்னிடம் நான் யாரென்றோ என் ஜாதி என்னவென்றோ கேட்கவில்லை. இந்தியாவின் ஒதுக்குப்புறமான பாகங்களில் செல்லும் போது தான் நம் தேசத்தின் யதார்த்தமான தன்மை புரிய வரும்.

'ரைடிங் சோலோ' எந்த வகையில் ஒரு மும்பையைப் பற்றிய படம் என்று சொல்லலாம்? மும்பை அதன் ஒரு பிரேமில் கூட இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் 'சாங்தாங்' இல் பிறந்து வளாந்த ஒருவரால் 'ரைடிங் சோலோ' படைத்திருக்க முடியாது. ஒரு விதத்தில் பாத்தால் 'சாங்தாங்'கைச் சார்ந்த ஒருவா சந்தர்ப்பங்களின் ஊரான மும்பையை எவ்விதம் அணுகுவார் என்பதை யூகிக்க சுவாரஸியமாக இருக்கும்.

உண்மையைச் சொன்னால் 'ரைடிங் ஸோலோ' நகரயாத்திரிகளைப் பற்றியதாகும். நாடோடியாகத் திரியக் கனவு காணும் நகரத்தானை ஒரு பக்கமும் உலகின் மிக உயரமான பிரதேசத்தில் நூற்றாண்டுகளாக வாழும் உண்மையான நாடோடிகளை இன்னொரு பக்கமும் காணலாம். சிலீணீஸீரீ-றிணீs பிரதேசத்தின் வாழ்க்கை முறைகள் பலவற்றையும் இது எடுத்துக்காட்டுகிறது. உலகின் மிகக் கடுமையான பிரதேசத்தில் வாழ்ந்தபடி இந்த மக்கள் எப்படி இயற்கையையும் விசுவாசத்தையும் ஓயாத உழைப்பையும் சமூகத்தையும் ஒருசேரக் கொண்டு சென்றார்கள் என்பது என் அகக்கண்ணைத் திறந்துவிட்டது. இதை என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது என்பது என் அதிஷ்டம் தான். ஆனால் அவர்கள் தங்களின் கடினமான வாழ்க்கையை நடத்திச் செல்வதைப் பார்த்தப் பிறகு என்னைப் பற்றிய கனவுத் தன்மையை (ஸிஷீனீணீஸீtவீநீ) நான் இழந்துவிட்டேன். எனக்குத் தெரியும் நான் வெறும் பயணி மட்டுமே.

இந்தப் படத்தின் பின்னணி இசை அருமையாக உள்ளது. இது எப்படி சாத்தியமானது?

வேத் நாயர் இந்த இசையை முழுவதும் தனியாகவே அமைத்தார். நான் அவரிடம் சொன்ன தெல்லாம் இசை எளியதாகவும் படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கட்டும் என்றுதான். பயணிக்கும் போது ஒருவர் உடன் கொண்டு செல்லும் புல்லாங்குழல் கிடார் போன்ற இசைக் கருவிகளை மட்டும் உபயோகிக்கத் தீர்மானித்தார். சாங் _ பாஸ் பிரதேசங்கள் வரும் பாகங்களில் புல்லாங்குழலும் விசில் ஒலியும் மட்டுமே பயன்படுத்தினார். (அந்த ஊர்ப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்து ஒன்றுதிரட்ட இந்த இரண்டு உத்திகளைத்தான் இன்னும் பயன்படுத்துகின்றனர்.)

சந்தையில் இந்தப் படம் எப்படிப் போகிறது? பணம் வசூல் செய்ய முடிகிறதா இல்லை விருதும் பாராட்டும் பெற்ற பிறகும் உயிர் பிழைக்க தவிக்கிறதா?

நாங்கள் நினைக்கும் அளவுக்குப் படம் சரியாகச் செலவாகவில்லை. பிரச்சினை என்னவென்றால் இதைச் சந்தையில் விற்கவும் விளம்பரம் செய்யவும் எங்களிடம் பணம் இல்லை. இந்த ஞிக்ஷிஞியை வலைத்தளம் வழியாகத்தான் விற்கிறோம். (ஷ்ஷ்ஷ்.பீவீக்ஷீttக்ஷீணீநீளீஜீக்ஷீஷீபீuநீtவீஷீஸீs.நீஷீனீ) தனி ஒருவனாகச் செயல்படும் ஆவணப்படத் தயாரிப்பாளருக்குப் படத்தை விற்பதென்பது ஒரு ஓயாத வேலை தான். போகிற போக்கைப் பாத்தால் நான் இந்த முதல் படத்தை என்னுடைய மூன்றாவதோ நான்காவதோ படத்துடன் உலகளாவிய விநியோகிஸ்தர்களிடம் விற்றுக் கொண்டிருப்பேன் என்றுதான் தோன்றுகிறது. என்னுடைய இரண்டாவது படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னரே எடுத்து முடித்துவிட்டேன். ஆனால் அந்தப்படச் சுருள்களை இன்னும் தொடக்கூட இல்லை. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் தொடங்கவில்லை. இதெல்லாம் எவ்வளவு மெதுவாக நகர்கிறது என்றும் எந்தளவுக்குப் பணம் வந்து சேர்கிறது என்றும் உங்களுக்குப் புரிகிறதல்லவா.

திரைப்படங்களைப் பொறுத்தவரை உங்கள் எதிகாலத் திட்டங்கள் மற்றும் வாழ்க்கையின் பெரிய குறிக்கோள்கள் என்ன?

இன்னும் ஒரு ஐந்தோ ஏழோ ஆண்டுகள் தனி ஒருவனாகவே படங்கள் செய்வேன். பிறகு புனைகதைப் படங்கள் செய்யவேண்டும் (அது என் முதல் கனவு) இப்போதைக்கு எந்தத் தயாரிப்பாளருக்கும் பதில் சொல்லத் தேவையின்றி நான் விரும்பியபடி படம் பண்ணும் சுதந்திரத்தை அனுபவித்து மகிழ்கிறேன்.
(நன்றி : தி ஹிந்து)

நேர்காணல்: சுபாஷ் ஜெயன் / ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: டாக்டர் டி.எம். ரகுராம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com